விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் நிர்வாகி உள்ளிட்ட 3 பேருக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவல் : வரும் 13 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு
Mar 30 2023 5:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில், ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 3 பேருக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவலை நீட்டித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைய உள்ள நிலையில் ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின், அவரது மனைவி மரியா, ஆசிரம பணியாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட 3 பேரும் சிறையில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி, 3 பேரின் காவலை வரும் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.