கடலூர் அருகே இரவு நேரத்தில் வாகனங்களின் பேட்டரிகள் திருட்டு : சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இளைஞர் கைது
Mar 30 2023 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் அருகே இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களின் பேட்டரிகளை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். புவனகிரி பகுதியில் இரவில் நிறுத்தப்படும் பல்வேறு வாகனங்களின் பேட்டரிகள் திருட்டு போவதாக வாகன உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கலைச்செல்வம் என்ற இளைஞர் வாகனங்களின் பேட்டரிகளை திருடுவது தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.