நாகை ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பெண் ஊழியர் மீது தாக்குதல் : தாக்கிய நபரை கைது செய்தது போலீஸ்
Mar 30 2023 5:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பெண் ஊழியரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் கட்டுமாவடி பகுதியை சேர்ந்த பெண்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது உணவகத்திற்குள் புகுந்த ஒருவர், அங்கிருந்த இந்திரா என்ற பெண்ணை தாக்கிவிட்டு தப்பி சென்றார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர், ஏற்கனவே உணவகத்தில் வேலை பார்த்த ஜானகி என்பவரின் கணவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.