ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டம்

Mar 26 2023 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம்‌‌ சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அக்‍கட்சியினர் சத்தியாகிரக அறப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடம் முன்பு, காங்கிரசார் 100-க்‍கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராகுல் காந்தியை எம்பி பதவி நீக்கம் செய்யப்பட்டதைக்‍ கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் கருப்பு துணி கட்டி காந்தி சிலைக்கு மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து, சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார் பாளையத்தில் இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் சத்தியாகிரகம் போராட்டம் நடைபெற்றது.

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி நீக்கப்பட்டதைக்‍ கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00