டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டினை விரைந்து அளித்திட வேண்டும் - தமிழக அரசுக்கு அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

Feb 8 2023 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்‍கு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், கடலில் பேனா சின்னம் வைக்க 80 கோடி ரூபாய் செலவிட தயாராக இருக்கும் இந்த ஆட்சியாளர்கள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை அளிக்க தயங்குவது ஏன்? என்றும் புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்‍கையில், தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 5 லட்சம் ஏக்கர் நெற்பயிர் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

விளைநிலங்களில் மழைநீர் தேங்கியிருப்பதால் இயந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலையில், பயிர்கள் வீணாகி வருவதாக விவசாயிகள் சொல்லி வேதனை தெரிவிப்பதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

பருவம் தவறிய இந்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்து இருப்பது போல், அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த நெல்லும் மழை நீரில் நனைந்து வீணாவது மிகவும் வேதனை அளிப்பதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

டெல்டா விவசாயிகள் ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பாடுபட்டு விளைவித்த பயிரை இழந்து தவிக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், நெல் கொள்முதலில் நெல் ஈரப்பதத்தை 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளதை சுட்டிக்‍காட்டியுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, இந்த நியாயமான கோரிக்கைகளைகருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் உடனே நிறைவேற்றிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோன்று, தேவையான இடங்களில், தேவையான நேரத்தில் கொள்முதல் நிலையங்களை திறந்திடவும், கொள்முதல் செய்த நெல்லை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லவும் தமிழக அரசு துரிதமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், மேலும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வெளிப்படையான கணக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஹெக்டருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ஆனால் இன்றைய இடுபொருட்களின் விலையேற்றம், உர விலை உயர்வு போன்ற காரணங்களால் ஹெக்டேருக்கு 35 ஆயிரம் ரூபாய் அளவுக்கு விவசாயிகள் செலவிட்டு இருக்கின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலில் பேனா சின்னம் வைக்க 80 கோடி செலவிட தயாராக இருக்கும் இந்த ஆட்சியாளர்கள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை அளிக்க தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டினை உடனே வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00