சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக 5 பேர் நியமனம் - வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோர் நீதிபதிகளாக நியமனம்
Feb 6 2023 1:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 17ம் தேதி கூடிய உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், லக்ஷமண சந்திர விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமசாமி நீலகண்டன் மற்றும் குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய ஐந்து வழக்கறிஞர்களும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட உள்ளனர். கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள இவர்கள் ஐந்து பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.