சேலத்தில் காதலியுடன் மொட்டை மாடியில் பேசிக்கொண்டிருந்த போது காதலியின் தாய் சத்தம் போட்டதால் தப்பிக்க 50 அடி உயரத்தில் இருந்து குதித்த போது தலையில் அடிபட்டு காதலன் பலி
Feb 4 2023 2:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலத்தில் காதலியுடன் மொட்டை மாடியில் பேசிக்கொண்டிருந்த போது காதலியின் தாய் சத்தம் போட்டதால், தப்பிக்க மாடியில் இருந்து குதித்த காதலன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய், சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் நிலையில், அதே கல்லூரியில் பயின்று வரும் காதலி ஹரிணியை பார்க்க நள்ளிரவில் காதலி தங்கியிருந்த சின்னகொல்லப்பட்டி அப்பார்ட்மெண்ட்க்கு வந்துள்ளார். இருவரும் மொட்டை மாடியில் தனியாக சந்தித்து பேசிக்கொண்டிருந்த போத அங்கு வந்த காதலியின் இருவரையும் பார்த்து சத்தம் போட, தப்பியோட திட்டமிட்ட சஞ்சய், 50 அடி உயர மொட்டை மாடியில் இருந்து குதித்தார். இதில தலையில் பலத்த காயமடைந்த சஞ்சய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் அறிந்து வந்த காவல்துறையினர் சஞ்சயின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.