முதுமலை வளர்ப்பு யானைகளை பராமரிப்பது குறித்த பயிற்சிக்காக 8 பேர் தாய்லாந்துக்கு சென்றுள்ளனர்
Feb 4 2023 2:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதுமலை வளர்ப்பு யானைகளை பராமரிப்பது குறித்த பயிற்சிக்காக 8 பேர் தாய்லாந்துக்கு சென்றுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் உள்ளன. இங்கு, முகாம்கள் அமைக்கப்பட்டு யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. யானைகளை பராமரித்து, வளர்க்கும் பணிகளில் இங்குள்ள இருளர், குரும்பர் பழங்குடியின மக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இங்குள்ள பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு யானை வளர்ப்பில் பல புதிய யுக்திகளை கையாளும் வகையில் தாய்லாந்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதற்காக, முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து 8 பேர் சென்றுள்ளனர்.