சென்னை கொரட்டூரில் மளிகை கடையின் பூட்டை உடைத்து கொள்ளை - 2 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைப்பு
Feb 4 2023 2:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை கொரட்டூரில் மளிகை கடையில் பணம் மற்றும் கல்லாப்பெட்டியை திருடர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை கொரட்டூர் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த மணி, அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 23ம் தேதி கடையின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் கல்லாப்பெட்டி திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கொரட்டூர் போலீசார், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் குமார் மற்றும் ராஜி ஆகியோரை கைது செய்தனர் . கொரட்டூர் தெருக்களில் கையில் கடப்பாரையுடன் திருடர்கள் நடந்து செல்லும் காட்சியும் மேலும் திருடிவிட்டு கல்லாப்பெட்டியுடன் மீண்டும் திரும்பிச் செல்லும் சிசிடிவி காட்சியும் தற்பொழுது வெளியாகியுள்ளது.