சேலம்: திருமலைகிரி கோயிலுக்கு சென்ற இளைஞரை திமுக பிரமூகர் திட்டியதால் சர்ச்சை
Feb 4 2023 1:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் திருமலைகிரி கோயிலுக்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அனைத்து தரப்பு மக்களும் சென்றனர். திருமலைகிரியில் உள்ள கோயிலில் பட்டியல் இனத்தை சேர்ந்த இளைஞர் உள்ளே சென்றதால், திமுக ஊராட்சி மன்ற தலைவர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டிய வீடியோ வைரலான நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கோயில் மீண்டும் திறக்கப்பட்டு அனைத்து சமூகத்தினரும் கோயில் உள்ளே சென்றனர். அப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.