சென்னை யானைக்கவுனியில் நகை வியாபாரிகளிடம் போலீஸ் எனக் கூறி ரூ. 1.40 கோடியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் - சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்மநபர்களை தேடிவரும் போலீசார்
Feb 4 2023 12:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை யானைக்கவுனி பகுதியில், நகை வியாபாரிகளிடம் போலீஸ் எனக் கூறி, ஒரு கோடியே 40 லட்ச ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை சேர்ந்த நகை வியாபாரிகளான சுப்பாராவ், ரஹ்மான் ஆகிய இருவரும் யானைக்கவுனியில் உள்ள வீரப்பன் தெருவில் நகை வாங்குவதற்காக பணப்பெட்டியுடன் சென்றுள்ளனர். அப்போது ஆட்டோவில் வந்த இருவர், தங்களை போலீஸ் என கூறிக்கொண்டு, அவர்களிடமிருந்த பணத்தை சோதனை செய்ய வேண்டும் எனக்கூறி சுப்பாராவிடமிருந்து பணப்பெட்டியை பறித்துக் கொண்டு, இருவரையும் கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சுப்பாராவும், ரஹ்மானும் உடனடியாக யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.