கும்பகோணத்தில் மந்திரிப்பதாக கூறி ஒன்றரை சவரன் சங்கிலி திருட்டு - ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து போலீசார் சறையில் அடைப்பு
Feb 3 2023 4:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணம் எழில் நகரை சேர்ந்த பாத்திமா பேகம் என்பவரிடம், மந்திரிப்பதாக கூறி ஒன்றரை சவரன் சங்கிலியை திருடிச் சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். நகைகளை கொண்டு மந்திரித்தால், திருமணம் ஆகி செல்லும் தங்களது மகளின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என ஆசை வார்த்தைக் கூறி ஒன்றரை சவரன் நகையை வாங்கிக் கொண்டு, ஒரு மணி நேரம் கழித்து எலுமிச்சம் பழம் மற்றும் ஒரு பேப்பர் பொட்டலம் ஆகியவற்றை கொடுத்துள்ளார். 24 மணி நேரம் கழித்து பிரித்துப் பார்க்க வேண்டும் என கூறியதால் சந்தேகம் அடைந்த அவர், பொட்டலத்தை பிரித்து பார்த்த போது நகைக்கு பதில் கல் உப்பு இருந்துள்ளது. புகாரின்பேரில் காவல்துறையினர், ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து நகையை மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.