தமிழகத்தில் வரும் மே மாதம் 5-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் - 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
Jan 30 2023 5:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
12 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 17 ஆம் தேதியும், வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், துறை சார்ந்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 17ம் தேதியும்,11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் 19ம் தேதியும் வெளியிடப்படும் என தெரிவித்தார்.