மதுரையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற மேடையில் கருணாநிதி படம் தவிர்ப்பு - கருணாநிதி படம் இல்லாதது குறித்து தொண்டர்கள் கடும் அதிருப்தி

Dec 2 2022 1:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட விழா, கரும்பு வீச்சு. சேர்கள் வீச்சு என களேபரமாக மாறியது. சின்னவரின் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட இளைஞரணி சின்னவர்களின் அமளி துமளியால் பாதியில் முடிந்த கூட்டம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

மதுரை மாவட்ட திமுக சார்பில் பாண்டிகோவில் ரிங்ரோடு பகுதியில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கம் போல் அடுத்த வாரிசு அண்ணன்தான் என்பதைக் காட்டும் வகையில் ரிங்ரோடு முழுவதிலும் வரவேற்பு பதாகைகளும், திமுக கொடிகளும் பறந்தன. விழா மேடையை சுற்றி 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு லட்சக்கணக்கான கரும்புகளும் வாழைத்தாரும் கட்டப்பட்டு ஆடம்பர வரவேற்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அதேநேரம் உதயநிதி வருவதற்குள் கட்சித் தொண்டர்கள் எடுத்துக் கொண்டு ஓடி விடக் கூடாது என்பதற்காக கரும்புக்கும் வாழைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது பார்ப்போரை சிரிக்க வைத்தது. அழைத்து வரப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களில் பலர், உதயநிதி வரத் தாமதமானதால் வெளியேறினர். இதனால் அரங்கின் ஒரு பகுதி முழுவதும் காலி இருக்கைகள்தான் கண்ணில்பட்டன.

கூட்டம் தொடங்கிய பின்னும் கருணாநிதி, ஸ்டாலினையும் மறந்து உதயநிதி புகழ் பாடல்தான் ஓங்கி ஒலித்தது. அது மட்டுமல்லாமல் விழா போஸ்டர்கள் பலவற்றில் கருணாநிதியின் படம் கூட இல்லை. மேலும் உள்கட்சி மோதலை வெளிச்சம் போடும் வகையில் அமைச்சர் மூர்த்தி தரப்பு போஸ்டரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் படமும் அவர் தரப்பில் மூர்த்தி படமும் மிஸ்ஸிங். இது போன்ற செயல்களால் திமுக மூத்த நிர்வாகிகள் மனக்குமுறலுடன் அமர்ந்திருந்தனர்.

இந்த நிலையில் உதயநிதி மேடைக்கு வந்ததுதான் தாமதம், அடுத்த நொடியே கரும்பு மற்றும் வாழைத் தார்கள் மீது பாய்ந்தது கூட்டம். இதில் மழையும் சேர்ந்து கொண்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அது சின்னவர் பேசத் தொடங்கியதும் களேபரமாக மாறியது. இளைஞரணி சின்னவர்கள் மேடையை நோக்கி கரும்புகளையும் சேர்களையும் பறக்க விட்டனர். சிலர் இதுதான் நேரம் என சேர்களை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டனர்.

சேர்களை வாடகைக்கு விட்டவர் அவர்களை விரட்டி விரட்டி கெஞ்சிக் கொண்டிருந்தார். இதனை படமெடுத்த ஜெயா டிவி செய்தியாளரின் செல்போனையும் திமுக கும்பல் பறிக்க முயன்றது. இதனிடையே தொடர்ந்த மழை மற்றும் அமளியால் கூட்டத்தை பாதியிலேயே முடித்து விட்டு வெளியேறினார் உதயநிதி. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்ற பெயரில் கருணாநிதி குடும்பத்தில் அடுத்த தலைவரை உருவாக்க மதுரை திமுகவினர் கோடிக்கணக்கில் செலவு செய்து எடுத்த முயற்சி, இளைஞரணி சின்னவர்களால் சுக்கு நூறாகச் சிதறிப்போனதுதான் மிச்சம்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00