நெல்லை: 2 கால்கள் வெட்டப்பட்டும், ஒரு கை வெட்டப்பட்டும் ஒருவரது உடல் - போலீசார் விசாரணை
Nov 25 2022 5:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் பேட்டை எம்ஜிஆர் நகர் பகுதியில் 2 கால்கள், ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. பேட்டை அபிஷேகப்பட்டியைச் சேர்ந்த ஜேக்கப் ஆனந்தராஜ் என்ற கட்டுமான தொழில் அதிபர், கடந்த 22-ம் தேதி, டவுன் பகுதியில் தனது பேத்தியை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்வதற்காக காரில் வந்துள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பாததால், புகாரின்பேரில், பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பேட்டை எம்ஜிஆர் நகர் பகுதியில் 2 கால்கள், ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.