மதுரை அருகே பள்ளி வாகனத்தில் மாணவிகளுக்கு மூச்சு திணறல் - பள்ளி தாளாளர், தலைமையாசிரியர், வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
Nov 25 2022 5:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை அருகே பள்ளி வாகனத்தில் மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட விவகாரத்தில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பாலை பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 130 மாணவிகளை ஒரே வாகனத்தில் அழைத்து சென்ற போது 10 மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 4 மாணவிகள் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகள் நேரில் சென்று பள்ளியில் விசாரணை நடத்தி சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டிஸ் அளித்துள்ளனர். இந்நிலையில், பள்ளி தாளாளர், தலைமையாசிரியர், வாகன ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.