அ.இஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு : தியாகராய நகர் இல்லம் முன்பு திரண்டு சின்னம்மாவை வாழ்த்தி முழக்‍கம்

Nov 25 2022 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சின்னம்மா உடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

விருகம்பாக்கம் அம்மா பேரவை ஸ்ரீ தேவிபாண்டியனின் சகோதரரும், கொளத்தூர் தொகுதி இளைஞர் பாசறையைச் சேர்ந்த மணமகனுமான கோபிநாத் தனது திருமண அழைப்பிதழை புரட்சித்தாய் சின்னம்மாவிடம் கொடுத்து வாழ்த்து பெற்றனர்.

கடலூர் மேற்கு மாவட்ட கழக இலக்கிய அணி செயலாளர் திரு.ஞானவேல்ராஜா திருமதி.ஜெயந்தி ஆகியோரின் திருமண நாளை முன்னிட்டு புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர் பகுதி இளைஞரணி செயலாளர் திரு.விஜயகுமார் தனது பிறந்தநாளை முன்னிட்டு புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தென்சென்னை வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி. ஆர்.லட்சுமி, இல்ல சீமந்த விழாவில் கலந்துகொள்வதற்காக புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வாழ்த்து பெற்றனர். அப்போது தென்சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயக்குமார் உடனிருந்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஐக்கிய இளைஞர் பேரவை பொருளாளர் திரு. ஜோஸ் அவர்கள் புரட்சித்தாய் சின்னம்மாவை கன்னியாகுமரி பகுதியில் கிறிஸ்து பெருவிழாவில் கலந்துகொள்ள அழைப்பிதழ் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆரணியைச் சேர்ந்த எஸ்.மதன், திருமதி. சந்தியா ஆகியோர் தங்களது திருமண நாளை முன்னிட்டு புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கழக மாநில செய்தி தொடர்பாளர் தேனி கர்ணன் தலைமையில் கேரளா இடுக்கி ஜில்லா அதிமுகவை சேர்ந்த ஜாஜி, ஜோசி ஆகியோர் புரட்சித்தாய் சின்னம்மாவை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வாழ்த்து பெற்றனர்.

ஈரோடு புறநகர் மாவட்ட கழக நிர்வாகி திரு.செங்கோட்டையன் திருமதி. விஜயலட்சுமி தம்பதியினரின் மகனும் மணமகனுமாகிய திரு.பாவேந்தன், திருமதி.சசிகலா ஆகியோர் தங்களது திருமண நாளை முன்னிட்டு புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முன்னாள் அமைச்சர் ஆனந்தன் அவர்களின் மகன் திரு. அஸ்வின் ராமச்சந்திரன் திருமதி.தீபிகா ஆகியோர் தங்களது திருமணத்தை முன்னிட்டு புரட்சித்தாய் சின்னம்மாவை குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முன்னாள் அமைச்சர் ஆனந்தன் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அம்மா பேரவை துணை தலைவர் உதயகுமார் மற்றும் கழக தொண்டர்கள் புரட்சித்தாய் சின்னம்மாவை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தென்சென்னை மாவட்ட துணை செயலாளர் வேளச்சேரி எஸ்.சின்னத்துரை தலைமையில் கழக தொண்டர்கள் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூந்தமல்லி நகர கழக செயலாளர் பூவை கந்தன் தலைமையில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட திருவென்னைநல்லூர் ஒன்றிய கழக செயலாளர் குமார், எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் எம்.கணேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன் ஆகியோர் புரட்சித்தாய் சின்னம்மாவை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை புறநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் தீனதயாளன் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் புரட்சித்தாய் சின்னமாவை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதேபோன்று அப்பகுதியை சார்ந்த திருநங்கைகள் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

திருவள்ளூர் மாவட்ட செயல் வீரர் ஜான் என்பவர் புரட்சித்தாய் சின்னம்மாவை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.

வடசென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த 50வது வட்ட கழக செயலாளர் மதில் அ.பெருமாள் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் புரட்சித்தாய் சின்னம்மாவை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

திருவள்ளூர் மாவட்ட தேவர் பேரவை செயலாளர் எம்.இந்திரகுமார் தலைமையில் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து தேவர் திருமகனாரின் புகைப்படத்தை நினைவு பரிசாக வழங்கினர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் செங்குன்றம் நகர பாசறை செயலாளர் எஸ்.எச்.நாதன் தனது திருமண அழைப்பிதழை புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து கொடுத்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின் போது முன்னாள் அரசு கொறடா நரசிம்மன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன், கழக முதன்மைச் செயலாளர் சிவராஜ், முன்னாள் பூந்தமல்லி நகர செயலாளர் பூவை கந்தன், விழுப்புரம் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் திண்டிவனம் சேகர், திண்டிவனம் முகமது ஷெரீப், திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் எல்லாபுரம் எல்.ரஜினி, திருவள்ளூர் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ஜி.ராஜேந்திரன், கழக செய்தி தொடர்பாளர் திருமதி. வெண்மதி, மண்டல குழுத் தலைவர் ராமாபுரம் சேகர், செங்கல்பட்டு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முருகேசன், தலைமை கழக பேச்சாளர் அரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னாள் அரசு தலைமைக் கொறடா பி.எம்.நரசிம்மன் தலைமையில் புரட்சித்தாய் சின்னம்மாவை, தி.நகர் இல்லத்தில் திருத்தணி தொகுதி, ஆர்.கே பேட்டை ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.உத்தண்டன், முன்னாள் தொழிற்சங்க செயலாளர் குணசேகரன், முன்னாள் பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

தஞ்சை வடக்கு மாவட்ட பொன்.த.மனோகரன் தலைமையில், புரட்சித்தாய் சின்னம்மாவை அவரது இல்லத்தில் திருவாரூர் மாவட்ட மகளிரணியைச் சேர்ந்த பொன்னி கைலாசம், திருப்பனந்தாள் ஒன்றியத்தைச் சேர்ந்த விஜயராஜ், ரவிக்குமார், பாபு,ராஜேஷ் மற்றும் மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.தமிழரசன், தனது பிறந்தநாளை முன்னிட்டு புரட்சித்தாய் சின்னம்மாவை அவரது தி.நகர் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சேலம் புறநகர் மாவட்ட மீனவரணி செயலாளர் ஏ.எல்.சுரேஷ் தலைமையில் ஈரோடு மாவட்ட அம்மா பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த சக்திவேல், சேலம் மாவட்ட ஆதி தமிழர் பேரவையைச் சேர்ந்த செந்தமிழன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மாதாவரம் முரளி தலைமையில் புரட்சித்தாய் சின்னம்மாவை கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பள்ளிக்கரணையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆர்.கணேசன், புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும், புரட்சித்தாய் சின்னம்மாவிடம், தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யுமாறு கோரிக்கையும் வைத்தார்.

முன்னாள் வேலூர் மாவட்ட செயலாளர் பி.வாசு தலைமையில் புரட்சித்தாய் சின்னம்மா அவர்களை அவரது தி.நகர் இல்லத்தில் தொண்டர்கள் சந்தித்து வாழ்த்தி பெற்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00