ரயில் நிலையத்தை ரூ.49.36 கோடியில் மறுசீரமைக்க ஒப்பந்தம் : தெற்கு ரயில்வே பொது மேலாளர் சிங் ரயில் நிலையங்களில் ஆய்வு
Nov 25 2022 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெற்கு ரயில்வே சார்பில் தமிழகத்தில் 5 ரயில் நிலையங்களும், புதுச்சேரியில் ஒரு ரயில் நிலையமும், கேரளாவில் 3 ரயில் நிலையங்களும் சீரமைக்கப்பட உள்ளன. அதன் அடிப்படையில் 49 புள்ளி 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கன்னியாகுமரி ரயில்வே நிலையம் மறு சீரமைப்பு பணிகளுக்காக தெற்கு ரயில்வே ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான டெண்டர் பணிகளும் முடிவடைந்ததாக ரயில்வே நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப ரீதியான ஆய்வு பணிகள் முடிந்ததும், இந்த பணிகள் தொடங்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த பணிகள் குறித்த ஆய்வு பணிக்காக தெற்கு ரயில்வே பொது மேலாளர் சிங் கன்னியாகுமரி ரயில்வே நிலையம், நாகர்கோவில் ரயில் நிலையம், விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் பள்ளிவிளை ரயில் நிலையங்களை ஆய்வு செய்தார்.