தஞ்சாவூர்: குறைதீர் கூட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் - கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் வழங்கினர்
Nov 25 2022 4:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தரமற்ற விதைகள் விற்பனை செய்யப்படுவதை கண்டித்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள், திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகளுக்கு தரமற்ற விதைகளை விற்பனை செய்வதாக புகார் தெரிவித்தும், தரமான விதை சான்று பெற்ற வியாபாரிகள் மட்டும் விற்பனை செய்வதை உறுதி செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் வழங்கினர்.