போக்‍சோ வினோத்துக்‍கு 15 நாள் நீதிமன்ற காவல்... திருவள்ளுர் மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவின்பேரில் புழல் சிறையில் அடைப்பு

Nov 25 2022 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருநின்றவூர் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பள்ளி தாளாளரின் மகன் வினோத் குமார் கைது செய்யப்பட்டார். கோவாவில் பதுங்கி இருந்த அவரை கைது செய்த தனிப்படை போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் செயல்பட்டு வரும் ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பள்ளி தாளாளரின் மகனான வினோத்குமார் தான் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதியப்பட்ட நிலையில், வினோத் குமார் தலைமறைவானார். அவர் கோவாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார், வினோத் குமாரை கைது செய்தனர். தமிழகம் அழைத்து வரப்பட்ட வினோத் குமார் மகிளா நீதிமன்ற நீதிபதி சுபத்ரா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், வினோத்குமார் புழல் சிறையில் அடைக்கப்ப்பட்டார். முன்னதாக பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர் வினோத் விஷம் அருந்திய படி கதறி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், இது மாணவ-மாணவிகளுக்கு தெரியும் எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00