சென்னை: கோகைன் போதைப் பொருள் பறிமுதல் - உகாண்டா நாட்டுப் பெண்ணிடம் விசாரணை
Oct 3 2022 5:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எத்தியோபியாவிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 35 கோடி ரூபாய் மதிப்பிலான கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக உகாண்டா நாட்டுப் பெண்ணிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எத்தியோப்பிய தலைநகர் அடீஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இதில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். உகாண்டா நாட்டை சோ்ந்த நம்பீரா நோலீன் என்ற பெண் பயணியை பரிசோதனை செய்ததில், ஆடைக்குள் கோகைன் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் 35 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர். உகாண்டாவை சேர்ந்த அந்தப் பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.