தஞ்சை அருகே கொள்ளிடம் பாலம் ஆற்றில் குளிக்‍கச் சென்ற ஆறு பேர் நீரில் மூழ்கினர் - 4 பேரின் சடலங்களை மீட்ட தீயணைப்பு துறையினர்

Oct 3 2022 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சாவூர் அருகே கொள்ளிடம் பாலம் ஆற்றில் குளிப்பதற்காக சென்ற ஆறு பேர் நீரில் மூழ்கினர். அதில் 4 பேரின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டியை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 40 பேர் பூண்டி மாதா பேராலயத்திற்கு வந்து உள்ளனர். அவர்களில் சிலர் பூண்டி செங்கரையூர் பாலம் அருகில் கொள்ளிடம் ஆற்றில் இன்று காலை குளித்துள்ளனர். அதில், தூத்துக்குடி மாவட்டம் சிலுவை பட்டியை சேர்ந்த சார்லஸ், பிரவீன் ராஜ், பிரதீவ்ராஜ் ,தாவீது, ஈஷாக்,தெர்மஸ் ஆகிய 6 பேரும் ஆழமான‌ பகுதியில் மூழ்கினர். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து உயிரற்ற நிலையில் சார்லஸ், பிரதீவ்ராஜ் ஆகிய இருவரையும் மீட்டனர். தொடர்ந்து 6 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு தாவீது மற்றும் பிரவீன் ராஜ் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. ரப்பர் படகில் சென்று மீதமுள்ள 2 பேரின் உடலை மீட்பதற்காக தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்ததால் சிலுவைப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00