உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - ஊழியர்களை திடீரென பணி நீக்‍கம் செய்ததால் போராட்டம்

Oct 3 2022 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக அந்த சுங்கச்சாவடியில் 3 நாட்களாக வாகனங்கள் கட்டணமின்றி செல்கின்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் 28 ஊழியர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கடந்த ஒன்றாம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி நிர்வாகம் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதன் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மைய பகுதியில் அமைந்துள்ள உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்கள் சுங்கக்‍கட்டணம் செலுத்தாமல், இலவசமாக செல்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00