உழைப்பவருக்கும், உழைப்பவரை உயர்த்த நினைப்போருக்கும், நானிலத்தில் எப்போதும் தனி மதிப்புண்டு என்பதைச் செயலில் காட்டுவோம் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

Oct 3 2022 1:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

உழைப்பவருக்கும், உழைப்பவரை உயர்த்த நினைப்போருக்கும், நானிலத்தில் எப்போதும் தனி மதிப்புண்டு என்பதைச் செயலில் காட்டுவோம் என அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலார் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கழகப் பொதுச் செயலார் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ஆயுதபுஜை, விஜயதசமி வாழ்த்துச் செய்தியில், செய்யும் தொழிலைப் போற்றி வணங்கும் ஆயுத பூஜையையும், வெற்றித் திருநாளான விஜயதசமியையும் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக்‍ குறிப்பிட்டுள்ளார்.

இந்த நன்னாளில் அவரவருக்கு மட்டுமின்றி, சுற்றியுள்ள அனைவரின் தொழிலும் வாழ்வும் சிறந்திட வேண்டுமென மனப்பூர்வமாக இறையருளை வேண்டுவோம் - நேர்மறை சிந்தனைகளை மனதில் இருத்தி, புதிய சாதனைகள் புரிவதற்கான பணிகளை வெற்றித்திருநாளான விஜயதசமியில் தொடங்கிடுவோம் - உழைப்பவருக்கும், உழைப்பவரை உயர்த்த நினைப்போருக்கும், நானிலத்தில் எப்போதும் தனி மதிப்புண்டு என்பதைச் செயலில் காட்டுவோம் என்று குறிப்பிட்டுள்ள திரு. டிடிவி தினகரன், விஜயதசமி நாளில் அனைவருக்கும் நலமும் வளமும் நிறைந்திட அன்னை பராசக்தியைப் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00