ஆ.ராசா, கனிமொழி மீதான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மேல்முறையீட்டு வழக்கு - மத்திய அமைச்சராக இருந்தபோது முறைகேடாக ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கியதாக சி.பி.ஐ. குற்றச்சாட்டு

Sep 23 2022 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா, மத்திய அமைச்சராக இருந்தபோது தகுதியற்ற நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டதாக, ஸ்பெக்டரம் ஊழல் மேல்முறையீட்டு வழக்கில் சிபிஐ தரப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

தி.மு.கவைச் சேர்ந்த ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிரான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மேல்முறையீட்டு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை நடைபெற்று வருகிறது. ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்த நிலையில், சி.பி.ஐ தரப்பில் வாதங்கள் முன்வைக்‍கப்பட்டன.

ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்தபோது தகுதியற்ற நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உள்பட யாருடைய பரிந்துரைகளுக்கும் செவிசாய்க்காமல் ஆ. ராசா தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் சி.பி.ஐ தரப்பில் வாதிடப்பட்டது.

பல்வேறு விதிமுறைகளை மாற்றி தனக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு முறைகேடாக ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ராசா ஒதுக்கீடு செய்துள்ளார் என்றும், சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழல் மேல்முறையீட்டு வழக்கில் இன்றைய விசாரணை நிறைவடைந்து நாளைய தினத்திற்கு வழக்‍கு ஒத்திவைக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00