அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட மூன்று வழக்குகளிலும் விரிவான விசாரணை நடத்த உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தகவல்

Sep 23 2022 12:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசுப் போக்குவரத்துத் துறையில், வேலை வாங்கித் தருவதாகக்‍ கூறி மோசடி செய்ததாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட மூன்று வழக்குகளிலும் விரிவான விசாரணை நடத்த உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்‍ கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், மூன்று வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்‍குகள், சென்னை எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு, நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளை மீண்டும் நடத்த தமிழக அரசுக்‍கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மூன்று வழக்குகளிலும் விரிவான விசாரணை நடத்த உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குகளை இறுதி விசாரணைக்காக வரும் 29-ம் தேதிக்கு ​நீதிபதி தள்ளிவைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00