சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை சம்பவம் - தங்க நகைகளுடன் கொள்ளையர்கள் தப்பிச்செல்லும் சி.சி.டிவி காட்சிகள் வெளியீடு

Aug 14 2022 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் நகைகளுடன் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் நேற்று பட்டப்பகலில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அதே வங்கியில் பணிபுரிந்த முருகன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இந்த கொள்ளையர்களின் கூட்டாளியான பாலாஜி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே முருகன் தலைமையிலான கொள்ளை கும்பல் வங்கியில் இருந்து கொள்ளையடித்தபின், அங்கிருந்து நகைகளுடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இதில் கொள்ளையர்கள் இருவரும் ஒரே பைக்கில் நகைகளுடன் செல்வது தெரியவந்துள்ளது.

இதனிடையே வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பாக வங்கி தரப்பில் இருந்து விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இதில் கொள்ளைபோன அனைத்து நகைகளும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00