தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் வருகை : சூரிய உதயத்தை கண்டு ரசித்தும் செல்பி எடுத்தும் மகிழ்ச்சி
Aug 14 2022 4:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொடர் விடுமுறை காரணமாக, கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடற்கரையில் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். சனி, ஞாயிறு, நாளை சுதந்திர தினம் என தொடர் விடுமுறை காரணமாக, கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்துள்ளனர். சூரிய உதயத்தை கண்டுரசித்து வணங்கி செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளதால், கன்னியாகுமரி களைகட்டியுள்ளது.