அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன், கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

Aug 14 2022 4:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில், துணைப் பொதுச்செயலாளராக புதிதாக பொறுப்பு அளிக்‍கப்பட்டதையொட்டி திரு.சண்முகவேலு சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, துணைப் பொதுச்செயலாளர் திரு.ரங்கசாமி மற்றும் திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் திரு.செல்லப்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

தஞ்சை மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளரும், மணமகனுமான திரு.சி.மணிகண்டன், தனது திருமண அழைப்பிதழை திரு.டிடிவி தினகரனிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் திரு.ரங்கசாமி, தஞ்சை மாநகர் மாவட்டச் செயலாளர் திரு.ராஜேஸ்வரன், வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு.வேலு கார்த்திகேயன், பூதலூர் தெற்கு ஒன்றிய ச்செயலாளரும், கழக ஒன்றிய குழு துணை தலைவருமான திரு.கோ.க.வி.சுப்பு, தஞ்சை மாநகர் மாவட்டக்‍ கழக பொருளாளர் ஜி.மதியழகன், பூதலூர் ஒன்றிய அவைத்தலைவர் திரு.எம்.கே.யுவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

திரு.டிடிவி தினகரனை, மதுரை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் மேலூர் திரு.சரவணன் சந்தித்து, தனது இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக அழைப்பிதழ் வழங்கி வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது முன்னாள் எம்.எல்.ஏ மேலூர் சாமியின் மகன் திரு. ஆசையன்சாமி, மேலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.எம்.சோமாசி, தலைமை கழக பேச்சாளர் திரு.எம்.கே.டி ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி தலைவர் திரு.கமல், அம்மா பேரவை நிர்வாகி திரு.ஏ.பி.இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.கே.வி.டி கலைச்செல்வன், தனது இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்ளுமாறு, திரு.டிடிவி தினகரனிடம் அழைப்பிதழ் வழங்கி வாழ்த்து பெற்றார். அப்போது, ஓய்வு பெற்ற டி.பி.ஓ திரு.சத்தியமூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00