சென்னை தலைமைச் செயலத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் : சென்னையின் சில பகுதிகளில் நாளை போக்குவரத்து மாற்றம்
Aug 14 2022 2:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுதந்திரதின விழாவையொட்டி, சென்னை தலைமைச் செயலத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுவதால் சென்னையின் சில பகுதிகளில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
75-வது சுதந்திர தினவிழா விழா, நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் முதலமைச்சர் தேசியக் கொடி ஏற்ற உள்ளார். சுதந்திர தினவிழாவில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சிளும் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
சென்னை கோட்டையில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுவதை முன்னிட்டு நாலை காலை 6 மணி முதல் விழா நிகழ்ச்சிகள் முடியும் நேரம் வரை, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.