அறிவித்த திட்டங்கள் மக்‍களுக்‍கு சென்று சேராத வகையில் சதுரங்கவேட்டை பட பாணியில் ஏமாற்றி வரும் தி.மு.க. அரசு - விரைவில் மாற்றத்தை சந்திக்‍க நேரிடும் என அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா எச்சரிக்‍கை

Jul 3 2022 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுநாள் வரை அராஜகம் தலைதூக்‍கி சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக பொதுமக்‍கள் குற்றம் சாட்டி வருவதாகவும், மின்வெட்டு உள்ளிட்ட பிரச்னைகளால் மக்‍கள் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளதாகவும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார். தி.மு.க அரசு மாறாவிட்டால், விரைவில் மாற்றத்தை சந்திக்‍க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதியில் புரட்சிப்பயணத்தை தொடங்கிய சின்னம்மாவுக்‍கு, குமணன்சாவடியில் சிறப்பான வரவேற்பு அளிக்‍கப்பட்டது. கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்‍கள் குழுமி வரவேற்பு அளித்தனர். மேலும், மயிலாட்டம், கரகாட்டக்‍கலைஞர்கள், தாரைதப்பாட்டக்‍ கலைஞர்கள், வாத்தியங்கள் இசைத்தும், நடனமாடியும் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

கழகத் தொண்டர்கள், அ.இ.அ.தி.மு.க. கொடியுடன் வாழ்த்து முழக்‍கமிட்டனர். முன்னாள் நகரச்செயலாளர் திரு.பூவை து.கந்தன் தலைமையில், கழக நிர்வாகிகள், வழக்‍கறிஞர் திரு.மனோ பாலாஜி, மணிகண்டன், அச்சுதன், சரவணன், சந்திரன் ஆகியோர் ஏற்பாட்டில், மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்‍கப்பட்டது. கழகக்‍கொடியுடன் திரண்ட தொண்டர்கள், சின்னம்மாவுக்‍கு மலர்தூவி வரவேற்பு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து எழுச்சியுரையாற்றிய சின்னம்மா, துடிப்புமிக்‍கத் தொண்டர்களை கொண்டது அ.இ.அ.தி.மு.க என தெரிவித்தார். தூயத்தொண்டர்களும், துடிப்புமிக்கத் தொண்டர்களும் இருப்பதால்தான் இவ்வளவுநாள் கழகம் போராடி வருவதாக அவர் குறிப்பிட்டார். அ.இ.அ.தி.மு.க.வை தொடங்கிய நாளிலிருந்தே அதை அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க செயல்படுவதாக குற்றம் சாட்டிய சின்னம்மா, மாண்புமிகு அம்மா, மக்‍களுக்‍கு அளித்த நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதே தி.மு.க. அரசு செலுத்தும் நன்றிக்‍கடன் என்றும், மீறினால் விரைவில் அந்த அரசு மாற்றத்தைச் சந்திக்‍க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

எழுச்சியுரையாற்றிய சின்னம்மாவை, ஆயிரக்‍கணக்‍கான மக்‍கள், மலர்தூவி வரவேற்றனர். அவரது வாகனம், மக்‍கள் வெள்ளத்தில் ஊர்ந்து சென்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00