மிகப்பெரிய அமைப்பாகத் திகழும் அ.இ.அ.தி.மு.க., தொண்டர்களின் விருப்பதுடனே என்றைக்‍கும் பயணிக்‍கும் - பூந்தமல்லி தொகுதி குமணன்சாவடியில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எழுச்சியுரை

Jul 3 2022 5:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, புரட்சிப்பயணத்தை தொடங்கியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் புரட்சிப்பயணம் மேற்கொள்ள, சென்னை தியாகராய நகரிலிருந்து புறப்பட்ட சின்னம்மாவுக்‍கு, வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

தமிழகம் தலை நிமிரவும், தி.மு.க. தலைமையிலான அரசின் அராஜகச் செயல்களைத் தடுத்து நிறுத்திடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை உறுதி செய்திட வலியுறுத்தியும், புரட்சித்தாய் சின்னம்மா, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதியில் தனது புரட்சிப்பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

ஏழை-எளிய மக்‍களின் பாதுகாவலர், எங்கள் தங்கம், புரட்சித்தலைவரின் பெருமைகளையும், தமிழகத்தின் வளர்ச்சிக்‍காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த இதயதெய்வம் புரட்சித்தலைவியின் சிந்தனைகளையும் மக்‍களிடம் கொண்டு சேர்க்‍கும் புனிதப் பயணமாக தொடர்ந்து பயணிக்‍கிறார். இதற்காக, தியாகராய நகர் இல்லத்திலிருந்து புறப்பட்ட சின்னம்மாவுக்‍கு, தொண்டர்கள் கழகக்‍கொடியுடன் வாழ்த்து முழக்‍கமிட்டனர். பெண்கள் திருஷ்டி கழித்து சின்னம்மாவை வழியனுப்பிவைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில், சின்னம்மாவுக்‍கு உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது. அ.இ.அ.தி.மு.க. கொடிகளுடன் குழுமியிருந்த தொண்டர்கள், சின்னம்மாவை வாழ்த்தி முழக்‍கமிட்டனர். அப்போது, சின்னம்மா, குழந்தைகளுக்‍கு இனிப்பு வழங்கி வாழ்த்தினார்.

போரூர் வழியாகச் சென்ற சின்னம்மாவுக்‍கு, போரூர் மேம்பாலம் அருகே, திருவள்ளூர் கிழக்‍கு மாவட்ட முன்னாள் செயலாளர் திரு.ஜீவானந்தம் தலைமையில், கழகத் தொண்டர்கள், பட்டாசு வெடித்தும், கழகக்‍கொடி ஏந்தியும், உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அய்யப்பன்தாங்கல் பகுதியிலிருந்து, சாலையின் இருபுறங்களிலும், சின்னம்மாவை வரவேற்கும் விதத்தில் பேனர்கள் வைக்‍கப்பட்டு கழகக்‍கொடிகள் வைக்‍கப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00