சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீர்கேடு : சீர்கேட்டை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை

Jul 3 2022 4:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் நிலவும் சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய, உடனடியாக நடவடிக்‍கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் நாள்தோறும் ஆயிரக்‍கணக்‍கானோர் வந்து உணவருந்தி செல்கின்றனர். தற்போது அங்கு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சமையல் அறை அருகே பெருச்சாலிகள் சர்வ சாதாரணமாக உலவும் நிலையில், ஈக்‍கள் மொய்த்து துர்நாற்றம் வீசுகிறது. குடிநீர் மேல்நிலைத் தொட்டி பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால், குடிப்பதற்கு வழங்கப்படும் தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. அம்மா உணவகத்தில் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டு மக்‍கள் அச்சமடைந்துள்ளனர். இதுதொடர்பாக ஜெயா பிளஸ் தொலைக்‍காட்சியில் விரிவான செய்தி வெளியானது. இந்தநிலையில், அம்மா உணவகத்தில் நிலவும் சுகாதார சீர்கேட்டை உடனடியாக சரிசெய்ய நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி சென்னை பெருநகர மாநகராட்சிக்‍கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் கோரிக்‍கை விடுத்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00