மகனின் இறப்புக்‍கு காரணமான போலீசார் மீது நடவடிக்‍கை எடுக்கக்‍கோரி மனு : தமிழக முதன்மை உள்துறைச் செயலர், தமிழக காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ்

Jun 28 2022 6:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

காவல்துறையினரின் சித்ரவதையினால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மகனின் இறப்பிற்கு காரணமான அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்‍கக்‍கோரிய வழக்‍கில், தமிழக முதன்மை உள்துறைச் செயலர், தமிழக காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த ரங்கம்மாள் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தனது மகன் ஈஸ்வரனை தல்லாகுளம் காவல் துறையினர் பொய்யான புகாரின் பேரில் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்துள்ளதாகவும், இதனால் மனமுடைந்த தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்றும் ஆனால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

எனவே தனது மகன் இறப்பிற்கு காரணமான காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இழப்பீடாக 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கு குறித்து தமிழக முதன்மை உள்துறைச் செயலர், தமிழக காவல்துறை தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00