கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை தடுக்காமல் இந்து சமய அறநிலையத்துறை தூங்குகிறது : சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

Jun 28 2022 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள அருள்மிகு காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 18 புள்ளி ஏழு இரண்டு ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி சீனிவாசன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி மு​னிஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என். மாலா ஆகியோரின் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு தொடர்பான கோவிலுக்கு சொந்தமான 18 இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளில் 14 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவற்றை அகற்ற அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.

இதனையடுத்து நீதிபதிகள், கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும், இதை தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு இருப்பதாக கண்டனம் தெரிவித்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வெறும் சம்பளத்தை மட்டும் வாங்கி கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். வரலாற்று சிறப்பு மிக்க பல்வேறு கோவில்கள் இன்னும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதற்கும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்படாத நிலையே காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

50 ஆண்டுகாலமாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், இப்போது கடந்த ஒரு ஆண்டுகாலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறுவதை ஏற்று கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00