சொந்த மாவட்டமான சேலத்திலேயே எடப்பாடி பழனிசாமிக்கு வலுக்கும் எதிர்ப்பு - சுவரொட்டிகளை கிழித்து எதிர்ப்பை வெளிப்படுத்திய அதிமுகவினர்
Jun 28 2022 3:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே அவரது போஸ்டர்கள் கிழித்தெறியப்பட்டுள்ளன.
அதிமுகவில் இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே போஸ்டர் யுத்தம் தீவிரமடைந்துள்ளது. அவர்களது ஆதரவாளர்கள் மாறி மாறி போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இதேபோல் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், அவரது ஆதரவாளர்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் போட்டர்களை ஒட்டியிருந்தனர். இந்த போஸ்டர்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கிழித்து எறிந்துள்ளனர். குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் வீடு அருகே உள்ள நெடுஞ்சாலை நகர் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழித்தெறியப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.