எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாக புகார் அளிக்கப்பட்ட விவகாரம் - தி.மு.க அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை ஓராண்டுக்கு மேலாக மௌனம் காப்பது ஏன்? என டிடிவி தினகரன் கேள்வி

Jun 28 2022 2:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் கோடிக் கணக்கில் ஊழல் நடந்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து, தி.மு.க அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை ஓராண்டுக்கு மேலாக மௌனம் காப்பது ஏன்? என அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பழனிசாமி கம்பெனியின் ஆட்சியில் மீன்வளத்துறை சார்பாக, மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் கோடிக் கணக்கில் ஊழல் நடந்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து, தி.மு.க அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை ஓராண்டுக்கு மேலாக மௌனம் காப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக புகார் அளித்தவர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டிய பிறகும், லஞ்ச ஒழிப்புத்துறை மழுப்பலான பதிலை தெரிவித்திருப்பது ஏன்? - அப்படியென்றால் தி.மு.க.வும் முதலமைச்சர் திரு. ஸ்டாலினும் தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றத்தான் ஊழல் ஒழிப்பு வேஷம் கட்டி வந்தார்களோ? என்றும் திரு. டிடிவி தினகரன் அடுக்‍கடுக்‍கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00