ஆனி மாத சர்வ அமாவாசையையொட்டி ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல் - முன்னோர்களை நினைத்து பலரும் வழிபாடு
Jun 28 2022 11:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆனி மாத சர்வ அமாவாசையையொட்டி ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று ஆனி மாத சர்வ அமாவாசை என்பதால் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று மாலை ராமேஸ்வரம் வந்தடைந்தனர். இன்று காலை அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிய பக்கதர்கள் எள்ளு பிண்டம் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர், ராமேஸ்வரம் திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புனித தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். அதை தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆனி மாத சர்வ அமாவாசையையொட்டி இன்று அயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்ததால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. எனவே, அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.