நாமக்கல்லில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை அதிகரிப்பு - இதற்கு முன் இல்லாத வகையில் 5 ரூபாய் 50 காசுகளாக உயர்வு
Jun 27 2022 1:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல்லில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்துள்ளது. தமிழக கோழிப்பண்ணை வரலாற்றிலேயே இது அதிக பட்ச விலையாகும்.
தமிழகத்தில் கோழிப்பண்ணைகள் அதிகம் நிறைந்த நாமக்கல்லில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் நாலரை கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டைகள் சத்துணவு திட்டத்துக்கு வழங்கப்படுவதுடன் கேரள மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. முட்டைகளுக்கு நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு விலை நிர்ணயம் செய்கிறது.
இதன்படி 5 ரூபாய் 35 காசுகளாக இருந்த முட்டை விலை, 15 காசுகள் உயர்ந்து 5 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பு போன்றவை காரணமாக முட்டை விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் விரைவில் ஒரு முட்டை விலை 6 ரூபாய் வரை உயர வாய்ப்பு உள்ளது.