தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 20 பேருக்கு தொற்று உறுதி - கொரோனா பாதித்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு
Jun 27 2022 11:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொரோனா பாதித்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முன் 30 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து இவர்களுக்கு விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே மேலும் மருத்துவ மாணவர்கள் 20 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரியில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது.