தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் ஆணைய இறுதி அறிக்கையை வெள்ளை அறிக்கையாக வெளியிடாதது ஏன்? - தமிழக அரசுக்கு ஆலை எதிர்ப்பாளர்கள் கண்டனம்

Jun 27 2022 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி விசாரித்த ஒரு நபர் ஆணைய இறுதி அறிக்கையை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிடாமல் மறைப்பது ஏன் என்று ஆலை எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தூத்துக்குடியில் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. சுமார் நான்கு ஆண்டுகள் விசாரணை நடத்திய ஆணையம் கடந்த மே மாதம் 18ஆம் தேதி தனது இறுதி அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால் ஒரு மாதத்துக்‍கு மேல் ஆன பின்பும் இது பற்றிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு இன்னும் வெளியிடாமல் மறைப்பது ஏன் என்று ஆலை எதிர்ப்பாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த அறிக்கையை சட்டமன்றத்திலேயே அரசு வெளியிட்டிருக்க வேண்டும் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00