புரட்சிப் பயணத்தைத் தொடங்கிய புரட்சித்தாய் சின்னம்மா : தியாகராயநகர் இல்லத்திலிருந்து புறப்பட்டபோது அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

Jun 27 2022 9:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா புரட்சிப்பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு அ.இ.அ.தி.மு.க தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை தியாகராயநகர் இல்லத்திலிருந்து புரட்சிப்பயணத்தைத் தொடங்கியபோது, அங்கு குழுமியிருந்த ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் வாழ்த்தி முழக்கமிட்டனர். தொண்டர் ஒருவர் வேல் கொடுத்து வாழ்த்து பெற்றார். பெண்கள் பலர், சின்னம்மாவை வாழ்த்தி முழக்கமிட்டனர்.

தொடர்ந்து சென்னை மதுரவாயலில் அ.இ.அ.தி.மு.க கொடியுடன் திரண்டிருந்த பொதுமக்களும், தொண்டர்களும், மலர்கள் தூவியும், வாழ்த்து முழக்கமிட்டும் சின்னம்மாவை வரவேற்றனர். அவர்களின் வாழ்த்துக்களைப் பெற்ற சின்னம்மா, குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்து வாழ்த்தினார்.

பின்னர் பூவிருந்தவல்லி சென்ற சின்னம்மாவிற்கு, முன்னாள் நகரக்‍கழகச் செயலாளர் திரு. பூவை கந்தன் தலைமையில் கழகத் தொண்டர்கள், பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க, மலர்தூவி, உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நசரத்பேட்டை பனிமலர் கல்லூரி பகுதியில் குவிந்த தொண்டர்கள், சின்னம்மாவுக்‍கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். கழக நிர்வாகிகள் திரு.சீனிவாசன், இந்திரகுமார் ஆகியோர் தலைமையில், பட்டாசு வெடித்து, மலர்தூவி வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு திருவள்ளூரில், கழக நிர்வாகி திரு.எல்லாபுரம் ரஜினி தலைமையில் பட்டாசு வெடித்து, மலர்தூவி வரவேற்பு அளிக்‍கப்பட்டது. கழக நிர்வாகி திரு.சார்லஸ் வழங்கிய இரட்டை வெள்ளைப் புறாவை, சின்னம்மா வானில் பறக்‍கவிட்டார்.

பின்னர் திருத்தணி புறவழிச்சாலை ரவுண்டானா பகுதிக்‍கு வந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் திரு.வேலஞ்சேரி D.செல்வம் தலைமையில் கழகத் தொண்டர்கள், கழகக்‍கொடிகளை ஏந்தியபடி பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க, மலர்தூவி வரவேற்பு அளித்தனர். 100க்‍கும் மேற்பட்ட கழகத் தொண்டர்கள், கழகக்‍‍கொடியுடன் இருசக்‍கர வாகனத்தில் அணிவகுத்து சின்னம்மாவை வரவேற்றனர்.

திருத்தணி புறவழிச்சாலை பகுதியில் கழக நிர்வாகி திரு.வேங்கையன் தலைமையில், கழகத் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர், பலாப்பழத்தை சின்னம்மாவுக்‍கு வழங்கி மகிழ்ந்தனர். பொதுமக்‍கள் வழங்கிய கரும்புச்சாறை மகிழ்ச்சியுடன் பருகிய சின்னம்மா, சிறார்களுக்‍கு சாக்‍லேட் வழங்கினார்.

திருத்தணி கோரமங்கலம் பகுதியில் அ.இ.அ.தி.மு.க தொண்டர்களும், பொதுமக்‍களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். கழகக்‍ கொடியை ஏந்தியும், வாழ்த்து முழக்‍கங்களையும் எழுப்பியும் சின்னம்மாவை வரவேற்றனர்.

திருத்தணி S.v.g புரம் பகுதியில் கழக நிர்வாகி திரு. அரி ராஜூ தலைமையில் கழக தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, அருள்மிகு சந்தான வேனுகோபாலசுவாமி திருக்கோயிலின் சார்பாக சின்னம்மாவுக்‍கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

திருத்தணி கிருஷ்ணாகுப்பம் பகுதியில் கழக நிர்வாகி திரு. ஏழுமலை தலைமையில் கழக தொண்டர்கள் மலர்தூவியும், பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அ.இ.அ.தி.மு.க. கொடியை கையில் ஏந்தியபடி, சின்னம்மாவுக்‍கு கழகத்தினர் வாழ்த்து முழக்‍கமிட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00