அ.ம.மு.க. கொடியை ஏற்றி வைத்தார் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் : மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து வரவேற்பு

Jun 26 2022 6:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், போரூர் பகுதியில் அமைக்‍கப்பட்டிருந்த கழகக்‍கொடியை ஏற்றி வைத்தார்.

திருவள்ளூர் கிழக்‍கு, திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் தெற்கு ஆகிய மாவட்டங்களுக்‍கான அ.ம.மு.க. செயல்வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் கூட்டம் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தலைமையில் திருவள்ளூர் அயப்பாக்‍கத்தில் நடைபெறுகிறது.

இதில் கலந்துகொள்வதற்காக கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், சென்னை அடையாறு இல்லத்தில் இருந்து புறப்பட்டார். இதைத்தொடர்ந்து, போரூர் சபரி நகர் பகுதியில் அமைக்‍கப்பட்டிருந்த அ.ம.மு.க. கொடியை திரு.டிடிவி தினகரன் ஏற்றிவைத்து இனிப்புகளை வழங்கினார்.

மதுரவாயல் பகுதியில், மதுரவாயல் மத்திய பகுதிக்‍கழகம் சார்பில் அமைக்‍கப்பட்டிருந்த அ.ம.மு.க. கொடியை திரு.டிடிவி தினகரன் ஏற்றிவைத்தார். முன்னதாக, இப்பகுதிக்‍கு வருகை தந்த திரு.டிடிவி தினகரனுக்‍கு மேளதாளம் முழங்க, பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, வானகரம் பகுதிக்‍கு வந்த திரு.டிடிவி தினகரனுக்‍கு, திருவள்ளூர் தெற்கு மாவட்டம் வில்லிவாக்‍கம் தெற்கு ஒன்றியக்‍கழகம் சார்பில் செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்‍கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00