விருத்தாசலம் அருகே, இளம்பெண் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு - பொதுமக்கள் விரட்டிச் சென்றபோது தப்பியோட்டம்

Jun 26 2022 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்த இளம் பெண் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்‍கப்பட்டுள்ளார்.

விருத்தாசலம் அடுத்த வலசை கிராமத்தில் வசித்து வருபவர் சாந்தகுமாரி, காசி தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவன் மனைவி இருவரும் நேற்று தன் வீட்டின் அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, பயங்கர துப்பாக்கிச் சத்தம் கேட்டது. இதில், சாந்தகுமாரி மயங்கிவிழுந்தார். சத்தம் கேட்டு உறவினர்கள் கூச்சலிட்டனர். துப்பாக்கியால் சுட்ட நபர்களை அவர்கள் விரட்டிச் சென்றனர். ஆனால், அவர்கள் தப்பிவிட்டனர். குண்டு பாய்ந்து காயமடைந்த சாந்தகுமாரியை, உறவினர்கள் மீட்டு, விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த மங்கலம்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முயல் வேட்டைக்காக வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நிலையில், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ


சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00