மதுரையில், கடை உரிமையாளர் வீட்டில் கதவை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Jun 26 2022 1:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் மளிகைகடை உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்‍கப்பட்டன.

மதுரை திருநகர் லயன் சிட்டி பகுதியில் உள்ள பிரணவ் தெருவைச் சேர்ந்தவர்கள் பொன்ராஜ் - ராமலட்சுமி தம்பதியர். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் அமெரிக்காவிலும், மற்றொருவர் பெங்களூருவிலும் பணியாற்றி வருகின்றனர். பொன்ராஜ், திருநகர் மூன்றாவது பேருந்து நிறுத்தத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். பொன்ராஜ் மற்றும் அவரது மனைவி இருவரும் வியாபாரத்திற்காக கடைக்கு செல்வது வழக்கம். மளிகைக்‍கடையை பூட்டிவிட்டு இருவரும் இரவில் வீடு திரும்பினர். வீட்டில் அனைத்து மின் விளக்குகளும் எரிந்த நிலையில் காணப்பட்டதுடன், பொருட்கள் அனைத்தும் சிதறிக்‍கிடந்தன. பீரோ கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்த 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00