கட்சிக்‍குள் பஞ்சாயத்து செய்யும் உரிமை நீதிமன்றத்திற்கு இல்லை : எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான சி.வி. சண்முகம் விமர்சனம்

Jun 25 2022 11:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

பொதுக்‍குழுப் பற்றி வைத்திலிங்கம் ரவுடித்தனமாக பேசியிருப்பதாக எடப்பாடி ஆதரவாளரான சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார். கட்சிக்‍குள் பஞ்சாயத்து செய்யும் உரிமை நீதிமன்றத்திற்கு இல்லை எனவும் தெரிவித்த அவர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் எழுந்துள்ள சூழலில், நேற்று நடைபெற்ற பொதுக்‍குழுக்‍ கூட்டத்தில், கொண்டு வரப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிக்‍கப்பட்டன. இதனால் கூட்டத்திலிருந்து ஓ.பி.எஸ். பாதியிலேயே வெளியேறிய நிலையில், அவர் மீது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தண்ணீர் பாட்டிலை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான சிவி சண்முகம் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது, பொதுக்குழு தொடர்பான வழக்கை அதிகாலை 3 மணி வரை விசாரிக்‍கும் அளவுக்‍கு அதிமுக்‍கியம் வாய்ந்ததா? என நீதிமன்றத்தை விமர்சிக்கும் வகையில் பேசினார். மேலும், கட்சிக்‍குள் பஞ்சாயத்து செய்யும் உரிமை நீதிமன்றத்திற்கு இல்லை என குறிப்பிட்ட அவர், தேர்தல் ஆணையத்திற்குதான் அந்த உரிமை உள்ளதாக தெரிவித்தார். பொதுக்‍குழு பற்றி வைத்திலிங்கம் ரவுடித்தனமாக பேசியிருப்பதாகவும் விமர்சித்தார்.

பொதுக்‍குழுவில் தீர்மானங்கள் நிராகரிக்‍கப்பட்டதால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாகவும், தற்போது, எடப்பாடி பழனிசாமி தலைமை நிலையச் செயலாளராகவும், ஓ.பன்னீர்செல்வம் பொருளாளராகவும் மட்டுமே பதவி வகிப்பதாகவும் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00