கிருஷ்ணகிரி அருகே விவசாயி நிலத்தின் பூட்டை உடைத்து அரசு அதிகாரிகள் அத்துமீறல் : சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட அரசு அதிகாரிகளுக்கு மக்கள் கண்டனம்
Jun 25 2022 11:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள விவசாயி ஒருவருடைய நிலத்தின் பூட்டை, சட்டத்திற்கு புறம்பாக அரசு அதிகாரிகளே உடைத்து அத்துமீறியிருப்பது, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த ஊத்தங்கரை பகுதியில் விவசாயி துரைமூர்த்தி என்பவருக்கு சொந்தமாக மாந்தோப்பு உள்ளது. இவரது தோப்பைச் சுற்றி காம்பவுண்ட் வேலியுடன் இரும்பு கேட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேட்டின் பூட்டை உடைத்து அத்துமீறி சிலர் நுழைந்திருப்பதாக விவசாயி துரைமூர்த்திக்கு தகவல் தெரிந்தவுடன், அவரும், அவரது குடும்பத்தினரும் பதறியடித்து ஓடி வந்து விசாரித்தபோது, சட்டத்திற்கு புறம்பாக பூட்டை உடைத்து அத்துமீறிய ஊத்தங்கரை தாசில்தார், ரெட்டிப்பட்டி வி.ஏ.ஓ. உள்ளிட்ட அரசு அதிகாரிகள் எனத் தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். தமிழகத்தில் விவசாயம் செய்வது - இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்வதுதான் சவால் என்றால், அரசு அதிகாரிகளின் இடையூறு, அராஜகத்தை எதிர்கொள்வதும் சமான்ய விவசாயிகளுக்கு மிகப் பெரும் சவாலாக உள்ளது என சமூகவலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ள இந்த அத்துமீறல் காட்சி வைரலாகி வருகிறது.