வடபழனி மேம்பாலத்தில் மாற்றுத்திறனாளி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்
Jun 26 2022 6:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை வடபழனி மேம்பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை வடபழனி மேம்பாலத்தின் மீது நேற்று மாலை மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் மூன்று வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த அரசு மாநகர குளிர்சாதன சொகுசு பேருந்து வடபழனி மேம்பாலத்தில் மேலே ஏற முயன்ற போது மாற்றுத்திறனாளி இளைஞரின் மீது மோதியது. பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே மாற்றுத்திறனாளி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த மாற்றுத்திறனாளியின் வாகன எண் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.