திருவண்ணாமலை: பள்ளியில் மதிய உணவு, சத்து மாத்திரை உட்கொண்ட மாணவர்களுக்கு வயிற்று வலி
Jun 23 2022 6:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் மதிய உணவு மற்றும் சத்து மாத்திரை உட்கொண்ட 43 மாணவ, மாணவிகளுக்கு வயிற்று வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.
செங்கம் அருகேயுள்ள படிஅக்ரகாரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, சுமார் 175 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான 61 மாணவர்களுக்கு சத்து மாத்திரையும், பின்னர் மதிய உணவாக சத்துணவு மற்றும் முட்டையும் வழங்கப்பட்டது. இந்நிலையில் சத்து மாத்திரை மற்றும் சத்துணவு சாப்பிட்ட 19 மாணவர்கள், 24 மாணவிகள் என 43 பேருக்கு தலைச்சுற்றல், வயிற்று வலி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டது. பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம், மாணாக்கர்கள், காரப்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.