சென்னை திருவொற்றியூரில் இருசக்கர வாகன பைனான்ஸ் கடையில் ரூ.2 லட்சம் மோசடி : கடை உரிமையாளரை ஊழியர் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோட்டம்
Jun 23 2022 6:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை திருவொற்றியூரில் இருசக்கர வாகன பைனான்ஸ் கடையில், 2 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்ற விவகாரத்தில், உரிமையாளரை ஊழியர் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவொற்றியூரில், இருசக்கர வாகனங்களை பைனான்ஸ் முறையில் விற்பனை செய்யும் கடையை கார்த்திக் என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடையில் பணியாற்றிய செந்தில் என்பவர், 2 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து திருவொற்றியூர் காவல்நிலையம் மற்றும் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்த செந்தில், கடை உரிமையாளர் கார்த்திக்கை சரமாரியாக வெட்டியுள்ளார். அவ்வழியாக போலீசார் ரோந்து வருவதைக் கண்டதும் கத்தியை வீசிவிட்டு செந்தில் தப்பியோடியுள்ளார். போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக்கூறி, கார்த்திக்கின் மனைவி ரம்யா, தனது குழந்தையுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். கத்தியால் கார்த்திக்கை தாக்கிவிட்டு தப்பியோடிய செந்திலை போலீசார் தேடி வருகின்றனர்.